இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையில் நாகப்பட்டினம், காங்கேசன் துறைகளை இணைத்து இன்று ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை, இன்று ஆரம்பமாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செரியாபாணி என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பல் தொழிநுட்ப ரீதியான சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு அதன் சேவை ஆரம்பத்தை ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
