தபால் மூல வாக்களிப்பிற்கு மேலும் இரண்டு தினங்கள்

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை பதிவுசெய்ய மேலும் இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட தினங்களில், தபால் வாக்குகளை பதியசெய்ய முடியாமல் போனவர்கள் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதன்படி, 24 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் 25 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகளானது கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி, 14, 15, 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் இடம்பெற்றிருந்தது.

எனினும் குறித்த தினத்தில் வாக்கினை பதிவுசெய்ய தவறவிட்ட அதிகாரிகளின் நலன் கருதி நேற்றும் இன்றும் வாக்கினை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு தினங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir