பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் இன்று காலை மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.