முன்னாள் பிரதியமைச்சர் தெவரப்பெரும மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான பாலித்த தெவரப்பெரும தாக்குதலுக்குள்ளான நிலையில்படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மத்துகம – வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை கண்காணிப்பு செய்வதற்காக குறித்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார்.

இதன்போது, அத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கின்றார்.

இதனிடையே அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர சத்திரசிகிச்சைக்கும் அவர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் நடத்திவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir