மின் கட்டணம் அதிகரிப்பு – வழங்கப்பட்டது அனுமதி!

இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலையான கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்;டணம் 25 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலகுகளுக்கான நிலையான கட்டணமானது 300 ரூபாவில் இருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

61 முதல் 90 வரையான மின் அலகுகளுக்கான கட்டணம் 35 ரூபாவில் இருந்து 41 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதன் நிலையான கட்டணம் 400 ரூபாவில் இருந்து 480 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 91 முதல் 120 வரையான அலகுகளுக்கான கட்டணம் 50 ரூபாவில் இருந்து 59 ரூபாவாக அதிகரித்துள்ளது.

குறித்த அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply