ஜேவிபி ஆட்சி அதிகாரத்தினை கோருவது சோதனை செய்யவே – ஆஷு மாரசிங்க சாடல்!

நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியை கோருவதாகவும், கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் ஜனாதிபதி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை எனத் தெரிவித்த ஆஷு மாரசிங்க, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளால் செயற்பட முடியாது என்பது இலங்கையிலும் உலகிலும் நிரூபணமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விளாடிமிர் சோலன்ஸ்கி ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து உக்ரைனில் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் ஆனால் இன்று யுத்தம் காரணமாக அவர் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தனது கட்டுப்பாட்டில் டொலர் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை எனவும் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆஷு மாரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply