இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை – நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் நிலவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய குழு நாட்டை வந்தடையவுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை காலம் முடிவடைந்துள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விண்ணப்பித்துள்ளன.

இந்தநிலையில், குறித்த விஜயத்தின்போது முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டனவா என பரிசீலிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என பிரதான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் குறித்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பின்லாந்து, போலந்து, ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply