மூன்று முக்கிய பொருட்கள்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

லங்கா சதொச நிறுவனம் தனது நிறுவனத்தின் தயாரிப்பில் விநியோகிக்கப்படும் 400 கிராம் பால்மா பொதிகளின் விலையை குறைத்துள்ளது.

அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 22 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 948 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, லங்கா சதொச வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் பால்மாவை கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை, லங்கா சதொசவில் பாசிப் பயறு மற்றும் கடலை என்பவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தற்போது அதிகளவான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply