நாட்டில் அதிகரித்துள்ள சிறுவர் தொழிலாளர்கள்!

பொருளாதார நெருக்கடி காரணமாக பன்னிரெண்டு முதல் பதின்மூன்று வயது வரையிலான பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பாடசாலை சுகாதாரப் பிரிவின் தலைவர் டொக்டர் ஆயிஷா லொகு பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்

இந்த நிலைமை பல பாடசாலைகளில் குறிப்பாக கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மற்றும் தொலைதூர மாகாணங்களில் அமைந்துள்ள சிறிய பாடசாலைகளில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமாயின் அது மிகவும் முக்கியமானதெனவும் முடியாத பட்சத்தில் தொழில் பயிற்சியை அவர்களுக்கு வழங்கினால் நல்லது எனவும் நிபுணத்துவ வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்றும் அவர் கூறினார். இந்த நிலை குறித்து கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு அந்த குழந்தைகளின் செலவுகளுக்காக நிதியொன்றை ஸ்தாபிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆயிஷா லொகு பாலசூரிய தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply