முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் திருடர்களின் தொல்லை அதிகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளில் சமையல் எரிவாய, பணம், துவிச்சக்கர வண்டி மற்றும் பட்டரிகள், தொலைபேசி என வீட்டில் காணப்படுகின்ற எவ்வகையான பொருட்களாயினும் வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் திருடப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அத்தியாவசியத் தேவை கருதி வீட்டிலிருந்து வெளியே செல்லவோ, எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் அல்லது கோயில் பூசை வழிபாடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர் வெளியே சென்று சில நிமிடங்களிலேயே பொருட்கள் திருட்டுப் போய் விடுவதாகவும், இதன் காரணமாகப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வயது முறிந்தவர்கள், அங்கவீனமானோர் ஆகியோரது வீடுகளை இலக்கு வைத்து தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக சிலர் புது குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்த போதிலும் தொடர்ச்சியாக திருட்டுக்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சிலர் புது குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

எனவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்களிடம் சென்று தகவல்களைப் பெற்று இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். (02)

You May Also Like

About the Author: digital

Leave a Reply