பொலிஸ் திணைக்களத்திற்கு அடுத்த வருடத்திற்கென கொள்வனவு செய்ய வேண்டிய கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மோப்ப நாய்கள், குதிரைகள் மற்றும் உபகரணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரே இந்த ஒவ்வொரு கொள்வனவுகளையும் மேற்கொள்ள முடியும் என பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வருடத்திற்குத் தேவையான கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும் அவை தேவையான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ரெந-21)
