காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்களுக்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் இன்றைய தனது வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்காகவும், அவர்கள் பரந்து வாழும் பிரதேசங்களுக்காகவும் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புகள் –

யாழ்ப்பாணத்தில் நிலவும் நன்னீர்ப் பிரச்சினைக்கு தீர்வு. அதன் அடிப்படைப் பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தை உள்ளடக்கி புதிய முதலீட்டு வலயம் நிறுவப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய , கண்டி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும். மாகாண கடற்றொழில் சபைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. அரச மற்றும் தனியார் துறை சார்ந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க 1500 மில்லியன் ஒதுக்கீடு.

விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதற்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை மேற்கொள்ளவும் அதற்காக அரச காணிகளில் 300 ஏக்கர் ஒதுக்கவும் சட்டத்திருத்தம்.

மீன்பிடித்துறை மேம்பாட்டிற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு . நன்னீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பால் பண்ணையாளர்களுக்கு விசேட கடன் திட்டங்கள் வழங்கப்படும்.

கட்டிட நிர்மாணத்துறைக்கு விசேட திட்டங்களும் அவர்களுக்கு அரச காணிகளை வழங்கவும் திட்டம்.

துறைமுகங்களை அபிவிருத்தி செய்யப்படும். அதில் திருகோணமலைத் துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்படும். இதற்கு ஆரம்ப கட்டமாக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

மலையகப் பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம், மாகாணங்களால் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும். எனவே, இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும். (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply