எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது கடந்த 12 ஆம் திகதியின் போது பூச்சியமாக குறைந்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நீர்மின் உற்பத்தியை அதிகப்படுத்தி எரிபொருளின் பயன்பாட்டை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், நீர்மின்சாரம் உற்பத்தி ஐம்பது சதவீதம் (52.34), நிலக்கரி 21.89 சதவீதம், சூரிய சக்தி 6.07 சதவீதம், காற்றாலை மின்சாரம் 4.67 சதவீதம், நீர்மின் நிலையங்கள் 14.1 சதவீதம் என மின்சார தேவையை பூர்த்தி செய்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக சுமார் 3 மாதங்களாக தொழிற்படாதிருந்த இயந்திரத்தின் திருத்தப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அந்த இயந்திரம் பிரதான கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளதாக ஆலை பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக 540 மெகாவாட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் சேர்க்க முடிந்ததுடன், தற்போது நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சுமார் 460 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்தனர். அதன்படி மூன்று இயந்திரங்களையும் இயக்குவதன் மூலம் 910 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் எனவும் பொறியியலாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். (ரெந-22)
