முன்னாள் பிரதமர் கமரூனுக்கு அமைச்சுப் பதவி

பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2016 வரை பிரித்தானியப் பிரதமராகப் பதவி வகித்தவர் கமரூன்.

கமரூனின் நியமனம் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சரவையில் இத்தகைய உயர் பதவியேற்பது மிகவும் அரிதானவொன்று. முன்னாள் பிரதமர் ஒருவர் மீண்டும் அமைச்சராக இணைவதும் நடந்து சில பத்தாண்டுகள் இருக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லாத மேலவையின் உறுப்பினராக டேவிட் கமரூன் நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் கிளவர்லி, பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மேனுக்கு பதிலாக உள்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார் கிளவர்லி.

பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை கையாண்ட விதம் குறித்து விமரிசனம் செய்ததால், சுவெல்லா பிரேவர்மேனை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply