3 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழில் சிக்கியது

கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காரைநகர், சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 3 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (அ)

You May Also Like

About the Author: digital

Leave a Reply