மின்சாரத்துறைச் சீர்திருத்தங்களுக்கான உத்தேச வரைவு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி – கஞ்சன விஜேசேகர

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரத்துறை சீர்திருத்தங்களுக்கான உத்தேச வரைவுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

புதிய சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும், நாடாளுமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்த புதிய மின்சாரச் சட்டத்தின் ஊடாக திட்டங்கள் கொண்டுவரப்படும், என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டமானது மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தனியார் துறையின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது, என்பதையும் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். (த)

You May Also Like

About the Author: digital

Leave a Reply