அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலியப் பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட RM Parks, ஷெல் உடன் இணைந்து இலங்கையில் பெற்றோலிய விற்பனைக்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் இந்த உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையின் சார்பாக சாந்தனி விஜேவர்தன மற்றும் மணிலால் ஜயசிங்க ஆகியோரும், RM Parks நிறுவனத்தின் சார்பாக ஜேசன் காலிசன் மற்றும் உப தலைவர் ஜஸ்டின் டிவிஸ் ஆகியோரும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
புதிய ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமை பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் இயக்குவதன் மூலம் இலங்கையில் பெட்ரோலியம் தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வணிகத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் மேற்கொள்ளவுள்ள நீண்ட கால ஒப்பந்தத்தின் படி, பெட்ரோல், டீசல், ஜெட் ஏ-1, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் இந்த நிறுவனம் ஈடுபடவுள்ளது. (04)
