இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்தனர்.
மன்னாரில் இருந்து 4930 இலக்கப் படகில் கடற்றொழிலுக்குச் சென்ற இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் நேற்று மதியம் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதான இலங்கை மீனவர்கள் ஐவரும் தனுஷ்கோடிக்குக் கொண்டு செல்லப்பட்டு தமிழகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எல்லை தாண்டி வந்த குறித்த இலங்கை மீனவர்கள், கடற்றொழிலுக்கு வந்தார்களா அல்லது கடத்தல் நடவடிக்கைக்காக வந்தார்களா? என்பது தொடர்பாகத் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (04)
