ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை தானே தோற்றுவித்தேன் என்றும், ஆகவே, தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
“நெருக்கடியான சூழலின் போது நாட்டைப் பொறுப்பேற்றதால் என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. நாட்டு மக்களின் நம்பிக்கையை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்” – என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கினார். (அ)
