யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியில் சிறப்புற நடைபெற்ற முத்தமிழ் விழா

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா காலை மற்றும் மாலை இரண்டு அமர்வுகளாக கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமாநந்தம் தலைமையில் நடைபெற்றது.

காலை அமர்வு பேராசிரியர் கா.சிவத்தம்பி அரங்கு எனவும், மாலை அரங்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அரங்கு எனவும் பெயரிடப்பட்டிருந்தன.

காலை அமர்வில் பிரதம விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகைசார் வாழ்நாள் பேராசிரியர் வ மகேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன், இலங்கை வங்கி யாழ்ப்பாண இரண்டாம் கிளையின் முகாமையாளர் எ.சந்தனுவும் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக வலிகிழக்கு பிரதேசசபையின் செயலாளர் இ.பகிரதன், நீர்வேலி பவானி களஞ்சிய உரிமையாளர் பொன்னையா கிருஷ்ணானந்தனும் கலந்து கொண்டனர்.

மாலை அமர்விற்கு பிரதமவிருந்தினராக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் கலாநிதி க.ரகுபரனும் சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி சி. சிவன்சுதன், கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் விக்னேஸ்வரி நரேந்நிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கெளரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் மு.கெளரிகாந்தன், முன்னாள் ஆசிரிய மாணவி காயத்திரி அகிலன் கலந்து சிறப்பித்தார்.

இவ்விழாவில் மாணவ ஆசிரியர்கள் முத்தமிழின் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் ஆற்றுகைகளை வெளிப்படுத்தினர்.

மாணவ ஆசிரியர்களுக்கு தமிழ் மொழிசார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளை பெருமளவில் மாணவ ஆசிரியர்களும் பொதுமக்களும் பார்வையிட்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக தமிழ் தந்த தாமோதரம் பிள்ளை என்கின்ற வரலாற்று நூல் அதன் ஆசிரியரும் தமிழ்மன்றக் காப்பாளருமான பாலசிங்கம் பாலகணேசனால் வெளியிடப்பட்டது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply