மருத்துவத்துறை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவிப்பு
இம்யூனோகுளோபுலின் வழங்கப்பட்ட எந்தவொரு நபரும் எச்.ஐ.வி, எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) அல்லது பிற தொற்றாத நோய்களுக்கான பரிசோதனைக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை என்று மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கூறுகின்றது.
இந்தச் சோதனைகளை மேற்கொள்வதற்கு குறித்த நபர்களை உட்படுத்தாமையின் மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாரிய தவறைச் செய்துள்ளார் என மேற்படி ஒன்றியத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
நன்கு பேர்போன பிரபலமான குற்றவாளிகளைவிட சுகாதார அமைச்சில் அதிகமான குற்றவாளிகள் உள்ளனர் என்பதை இந்த இம்யூனோகுளோபுலின் மோசடி உணர்த்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தவிர, சுகாதார அமைச்சின் 11 அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விமானப் பயணத்தடையை பெற்றுள்ளதாகவும் மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்தார். (ரெந)
