ஐக்கிய நாடுகள் உணவு அமைப்பு தெரிவிப்பு
காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனைகளுக்குக் கீழாக சுரங்கங்களை அமைத்துப் பதுங்கியிருப்பதாகத் தெரிவித்து, காஸா நகரத்தில் உள்ள மருத்துவமனைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே 4 நாட்களுக்குத் தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
காஸா நிலைவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்து வரும் நிலையில் ஐ.நா. உணவு அமைப்பு, காஸாவில் தற்போது 22 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு மக்கள் உணவு, எரிபொருள்கள் இன்றித் தவிப்பதாகவும் அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது. (04)