இந்த ஆண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 109 ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த புகையிரத பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே, திருத்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் புகையிரத பெட்டிகளில் ஏற்பட்ட குறைபாடுகளே குறித்த தடம் புரண்ட சம்பவங்களுக்கு காரணம் என தெரிவித்தார்.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில் புகையிரத கடவையில் இதுவரை மொத்தம் 61 ரயில்கள் மற்றும் வாகனங்கள் மோதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் 62 பேர் காயமடைந்தனர்.

மேலும், கடந்த சில மாதங்களில் தற்கொலை முயற்சிகள் மற்றும் கவனக்குறைவாக ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்வதால் 353 பேர் ரயில்களில் அடிபட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில், 154 பேர் உயிரிழந்துள்ளனர், குறைந்தது 203 பேர் காயமடைந்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply