நடவடிக்கை இடைநிறுத்தத்தை மேற்கொள்வோம்! – இஸ்ரேல் ராணுவ சா்வதேச செய்தித் தொடா்பாளா்

ஹமாஸ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ளப்போவதை ‘போா் நிறுத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்றே அழைக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் சா்வதேச செய்தித் தொடா்பாளா் ரிச்சா்ட் ஹெக்ட் தகவல் வழங்கியபோது, கட்டார் தலைமையில் ஹமாஸுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்த அமலாக்கத்தின்போது நாங்கள் தாக்குதலை நிறுத்திவைப்போம். இதற்குப் ‘போா் நிறுத்தம்’ என்ற வாா்த்தையை நாங்கள் பயன்படுத்தப்போவதில்லை. அதற்குப் பதிலாக ‘(தாக்குதல்) நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்ற வாா்த்தையைத்தான் பயன்படுத்துவோம்.

காஸாவில் போா் நடவடிக்கைகளை நிறுத்துவது தொடா்பாக இஸ்ரேல் அரசிடமிருந்து இதுவரை ராணுவத்துக்கு உத்தரவு வரவில்லை. எனவே, அதுவரை எங்களது தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்.

ஹமாஸ் அமைப்பினருடனான ஒப்பந்த அமலாக்கம் எப்போது தொடங்கும் என்பதைக் கூற முடியாது. இப்போதைய நிலையில் காஸாவில் எங்களது சண்டை தொடரும், என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, எகிப்து மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகையில் உள்ளூா் நேரப்படி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) போா் நிறுத்த அமலாக்கம் ஆரம்பமாகும் என்று தெரிவித்திருந்தனா். (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply