யாழ் நீதி மன்றின் முன்பாக அதிகளவு பொலிசார் கடமையில்!

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞன் உயிரிழந்தது யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோத்னை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது, நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு சென்று, சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களிடமும் வாக்கு மூலங்களைப் பெற்று இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில், சிறைச்சாலை அத்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளனர்.

அதேவேளை சட்ட வைத்திய அதிகாரி, உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. (01)

You May Also Like

About the Author: digital

Leave a Reply