யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் புதிய கட்டிடம் விரைவில் திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூசை” நேற்று நடைபெற்றதாடு, இன்று சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர். (01)

You May Also Like

About the Author: digital

Leave a Reply