அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் அச்சிட முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, திணைக்களத்திற்கு மூன்று அச்சுப்பொறிகள் கிடைக்கப்பெற்றதாகவும், இந்த வாரம் ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வழி வகுத்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அச்சு இயந்திரங்களில் எங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. கடந்த திங்கட்கிழமை தான் எங்களுக்கு தேவையான இயந்திரங்கள் கிடைத்தன. எனவே, இந்த வாரம் அச்சுப் பதிக்கும் பணிகளை மீண்டும் தொடங்குவோம் எனவும் இந்த ஓட்டுநர் உரிமங்களை 6 மாதங்களுக்குள் அச்சுப் பதித்து முடிப்பேன் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.