தென்னாசியாவிலேயே முதல் முறையாக நேபாளில் சம பாலினத் திருமணப் பதிவு

தென்னாசியாவிலேயே முதல் முறையாக, சம பாலினத் திருமணங்களை அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் தொடங்கப்பட்டது.

நேபாளத்தில் சம பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007 ஆம் ஆண்டே அனுமதி அளித்தது. பின்னா் 2015 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டத்திலும் பாலினத் தோ்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மாயா குருங் என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே என்ற சமபாலின சோ்க்கையாளருக்கும் இடையே சட்டபூா்வமாக நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா்.

அந்த மனுவையும் இதுபோன்ற பிற மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், சம பாலினத் திருமணங்களுக்கு கடந்த ஜூன் மாதம் சட்ட அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்தது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply