
இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் பேசிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, நவம்பர் மாத இறுதிக்குள் மொத்தம் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால், நவம்பர் 2023 இறுதிக்குள் 1.75 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.