துபாயில் இடம்பெறும் COP28 மாநாடு நிகழ்வில் காலநிலை நீதிமன்றம் தொடர்பான விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்ததுடன், காலநிலை பிரச்சினைகளை நீதி மற்றும் சமத்துவ உணர்வுடன் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கைத் தலைவருக்கு ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் மற்றும் உகாண்டாவின் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஜேன் ரூத் அசெங் ஓசெரோ ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
COP28 மாநாடு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலநிலை நீதிமன்றத்தின் துவக்கம், வெப்பமண்டல பெல்ட் முன்முயற்சி மற்றும் காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுதல் போன்ற 3 முக்கிய விடயங்கள் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, காலநிலை நீதிமன்றமானது, காலநிலை மாற்றம் மற்றும் குறிப்பாக உலகளாவிய வடக்கில் செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றின் அழுத்தமான பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.