பலாங்கொடையில் மண் சரிவு – ஹட்டனில் போக்குவரத்தில் தடை!

நேற்றிரவு பெய்த கடும் மழையினால் பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து பிரதான வீதி தடைப்பட்டுள்ளது.

இதனால், அதிகாலை முதலே அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பின்னவல நகரில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply