வடமாகாணத்தில் தென்னை முக்கோணவலய திட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை,பளை பிரதேச கள உத்தியோகத்தர்கள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், தென்னை பயிர் செய்கையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டு கள உத்தியோகத்தர்களிடம் அதற்கான தீர்வுகளும் கேட்டறியப்பட்டது.

வடமாகாணத்தில் இராணுவத்தினரிடமும்,வனஜீவராசிகள் திணைக்களத்திடமும் ,மற்றும் தரிசு நிலங்களாகவும் ஏறத்தாழ 40000 ஏக்கர் காணிகள் உள்ளதோடு காணிகளை தென்னை பயிர்ச்செய்கைக்காக விடுவித்தால் 66.35மில்லியன் தேங்காய்கள் வழங்கி அதன்மூலம் 5828மில்லியன் ரூபாய் தேசிய வருமானமாக பெறலாம் என கள உத்தியோகத்தர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தென்னை சார்ந்த சுற்றுலா மையங்களினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த பண்ணைகளை அமைத்தல், வெளிநாட்டு முதலீட்டாளர்களை தென்னை சார்ந்த தொழிற்துறைகளை ஆரம்பிக்க ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் எனவும் மேலும் தெரிவித்திருந்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply