இனி பெப்ரவரியில்தான் மின் கட்டணக் குறைப்பு!

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை கூறியுள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது:

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனை கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். அதன் பிறகு மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான பரிந்துரை வழங்கப்படும். பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரமளவில் மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை சுயாதீன நிறுவனத்தினூடாக கணக்காய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக சபையால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த சுயாதீன கணக்காய்வு நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply