150 ஹக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கைக்கு 50 வீத மானியத்தினை பெற்று தர கோரிக்கை!

வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்று தருமாறு அமைச்சர்  விடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த வருடம் நவீன மயப்படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வடக்கு விவசாயிகளுக்காக எடுத்துவரப்பட்ட சுமார் 21000 கிலோ உருளைக் கிழங்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தமை தொடர்பாகவும் இச்சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடைபெறாது எனவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply