பெப்ரவரி முதல் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின்கட்டணத்தை  குறைக்க உத்தேசிதுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்துள்ளார்.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பிய  போதே குறித்த தகவலை தெரிவித்தார்.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சகல தரவுகளையும் வழங்குவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

நீர் மின்னுற்பத்தி, நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம் கோரியுள்ளதாகவும் மின்கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைக்கும் யோசனைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்வரும் ஜனவரி மாதத்தின்  இறுதி வாரத்தில் மின் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கணிப்பு கோர தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சட்டத்துக்கமைய மின்கட்டண திருத்தம் தொடர்பான சகல நடவடிக்கைகளும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்  இதன்போது  தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின்கட்டணத்தை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பு மின்கட்டண திருத்தத்தில் எவ்வித தாக்கமும் செலுத்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply