அறிவித்தார் வருமானப் பிரிவு பணிப்பாளர்
2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வருமானம் அரசுக்குக் கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி,
ஜனாதிபதி ஊடக மையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் அரச வருமானம் மூன்று ட்ரில்லியன்களை எட்டியுள்ளது. நாம் இவ்வருடத்தில் 2850 மில்லின்களை மட்டுமே வருமானமாக ஈட்ட முடியும் என கணித்திருந்தோம். தற்போதும் அந்த இலக்கை கடந்துச் சென்றுள்ளோம்.
இருப்பினும் 2023 இல் அரசினால் விதிக்கப்பட்ட வரி மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தியிருந்தாலும் மக்களுக்கு அவசியமான அனைத்துச் சேவைகளையும் தட்டுப்பாடின்றி வழங்க எதிர்பார்க்கிறோம். எவரேனும் ஒருவர் அசாதாரணமாக பொருட்களின் விலையை அதிகமாக விற்பனை செய்யும் பட்சத்தில் அரசும் மக்களும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமையும் உள்ளது.
மற்றைய நாடுகளின் மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக 6-8சதவீதத்தினால் வரியும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக இவ்வருடத்தில் 2.2சதவீதமாகவே வற் வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. 2024 மொத்த தேசிய உற்பத்திக்கு இணையாக 4சதவீத வரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அது போதுமான அளவாக அமையாது. அதனால் பொருளாதார செயற்பாடுகளை சரியான முறையில் முன்னெடுக்கும் நீண்டகால பொறிமுறையொன்று அவசியப்படுகிறது. அதனால் 2024 வரவு செலவு திட்டத்தின் ஊடாக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
