ஜப்பானில் நிலநடுக்கம் விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில் சில கரையோர பிரதேசங்களை சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மட்டுமல்லாது தென் கொரியா, செர்பியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மக்கள் உடனடியாக கடற்கரையோரங்களில் இருந்து வெளியேறி மிக உயரமான கட்டிடங்களில் உச்சிக்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply