வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : வெளியான காரணம்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளார்.

பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் ஒரு வருடங்களிற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நோயாளிக்கு கோவிட் தொற்று ஏற்படவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply