உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு அனுமதி!

உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட 5 புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த குழுவால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நியமனங்களாக, மாலைதீவு குடியரசின் இலங்கை உயர்ஸ்தானிகராக பி.ஆர்.எஸ். குணவர்தனவும், அரச பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களுக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சுக்கு பொறுப்பாக டாக்டர் எம்.எம். எஸ்.எஸ்.பி. யலேகமவும், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக எஸ்.சி.ஜெ தேவேந்திராவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம். பெர்னாண்டோவும், மாநில அடமானம் மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவராக ஜே.எம். சூசைதாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், உயர் பதவிகளுக்கான குழு பாராளுமன்றத்தில் கூடியது.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, தலதா அத்துகோரள, உதய கம்மன்பில, கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply