சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முயற்சிகள் குறித்து பாராட்டினார்.
கடந்த 2023 டிசம்பரில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் வாரியம் ஒப்புதல் அளித்ததன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், இது நாட்டின் குறிப்பிடத்தக்க சீர்திருத்த முன்முயற்சிகளின் அங்கீகாரமாக வகைப்படுத்தப்பட்டது.
இதேவேளை, இலங்கை மேற்கொண்ட சீர்திருத்தங்கள் சாதகமான முடிவுகளை தரதொடங்கியுள்ளன என முன்னாள் ட்விட்டர் என அழைக்கப்படும் xதளத்தில் ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கரும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, பிராந்திய விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.