வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதற்கான புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
சில நிபந்தனைகளின் கீழ் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையில் வசிப்பவர்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பணத்தை அனுப்புவதற்கான அனுமதியை நாட்டின் மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.
இலங்கையின் கையிருப்பு படிப்படியாக மேம்பட்டுள்ளது மற்றும் மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் வரம்புகள் அதிகரிக்கப்படும் என்று குணவர்தன வாராந்த அமைச்சரவை மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.