கட்சிப் பொதுச் செயலர் அறிவிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது!, என கட்சியின் பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த இம்யுனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்துக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
