சுத்தமானதும், சுகாதாரமானதுமான உணவு பரிமாறும் உணவகம் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களினால் நடாத்திச் செல்லப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தின்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் (இதுவொரு உணவுக்கூடம் அல்ல) ஒரு வித்தியாசமான உணவகம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகம் விவசாய பீட மாணவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பகுதி நேர அட்டவணைகளில் வேலை செய்து இப்பணியினை மேற்கொள்கின்றனர்.
சுத்தமான உணவு, பானங்கள், இனிப்பு வகைகள், மில்க் ஷேக், கேக், ஐஸ் கோப்பி, மோஜிடோ, டோனட்ஸ், சூப்கள், மிருதுவான சிக்கன் பேபர்கர்கள், ஹொட் டொக்ஸ், நூடுல்ஸ் போன்றவை இங்கே நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.
செயற்கைச் சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் பசும் பால் உடனடியாகப் பெறப்பட்டு பானங்கள் தயாரிக்கப்படுகின்றமை, தினமும் தேவைப்படும் காய்கறிகள் அன்றே கொண்டு வரப்படுகிறமை போன்ற நடைமுறைகளால் இந்த முயற்சி பலரதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை, வளாகத்தில் குழந்தைகளுக்கான அழகிய பொழுதுபோக்கு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
