பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ்க்கு புற்றுநோய்

பிரித்தானிய அரச பரம்பரையின் தற்போதைய அரசரான மூன்றாம் சார்ல்ஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்கப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அரசரின் உடலில் புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றபோது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ‘புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றபோது மேலும் சில பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக மன்னருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மன்னர் சிகிச்சையில் இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சைக் கால கட்டத்தில் அரசுப் பணிகள் மற்றும் ஆவணப் பணிகளை அரசர் வழக்கம் போல் மேற்கொள்வார். மன்னர் விரைவில் குணமடைந்து பொதுப் பணிக்குத் திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply