பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா பிரியந்த வீரசூரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தராதரம் பார்க்கமால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளை அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளதுடன் அதற்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
.

You May Also Like

About the Author: kalaikkathir