நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நண்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 625 சந்தேகநபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, 625 சந்தேக நபர்களில் 545 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 80 சந்தேக நபர்கள் பொலிஸ் குற்றப்பிரிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள தேடப்படும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 80 பேரில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 3 பேருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், 74 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகவும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கைது செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 160 கிராம் ஹெரோயின், 152 கிராம் ஐஸ், 10 கிலோ 745 கிராம் கஞ்சா மற்றும் 683 போதை மாத்திரைகள் உள்ளடங்குகின்றன.