ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்பன பற்றியும் ஆராயப்பட்டன.
அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் பற்றியும் இந்த உரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையில் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர விஜித ஹேரத் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
