தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவர இந்தியா முயற்சியா?

விஜித ஹேரத் எம்.பி. விளக்கமான பதில்

இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் அரசுடன் இணைந்து செயற்படத் தயார் என்ற உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார் .

ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவு என்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை. நாமும் இது பற்றி கோரிக்கை எதையும் விடுக்கவும் இல்லை. ஆனால், இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் அரசுடன் செயற்படத் தயார் என இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.

அத்துடன், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் பேச்சு நடத்தினோம். இதற்கு நாம் உடன்படவில்லை என்பது பற்றியும் கூறினோம். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. அந்தத் தேர்தலில் எமது கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்ற தகவலை நாம் வழங்கினோம். கட்சியொன்றை ஆட்சிக்குக் கொண்டுவருவது பற்றி பேசப்படவில்லை.” – என்றார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply