யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் ஜீவனும் பங்கேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

இந்தக் கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். (அ)

You May Also Like

About the Author: digital

Leave a Reply