பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அதன்படி, இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் இந்தியாவின் நான்காம் கட்ட வீட்டுத் திட்டமானது பத்து மாவட்டங்களில் 45 பிரதேசங்களில் 1,300 வீடுகளை அமைக்க உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர்28 அன்று, இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4வது கட்டத்தின் கீழ் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.